நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸ் மண்கவ்வும்; தாஹிர் சேமன் அதிரடி அறிவிப்பு



முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆலவிருட்சத்தை நாசமாக்கி கொண்டிருக்கும் ஹக்கீம் காங்கிரஸ் இந்த முறை நிந்தவூரில் நல்ல பாடம் படிக்கும் என முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை தவிசாதளர் தாஹிர் தெரிவித்தார்.

சிலோன் முஸ்லிமிற்கு சிறப்பு பேட்டியளித்த போதே இதனை தெரிவித்தார், மேலும் கருத்து தெரிவித்தபோது,

நிந்தவூரில் 10 ஆசனங்களை எமது கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் அது மாத்திரமின்றி இம்முறை நிந்தவூரில் ஹக்கீம் காங்கிரஸ் மண்கவ்வும் எனவும் குறிப்பிட்டார், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் ஆகிய சபைகள் இம்முறை கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் நம்பிக்கையாக குறிப்பிட்டார்.