தைக்காநகரின் பொதுவேட்பாளராக மௌலவி சப்றின்; வெற்றிக்கு வியூகம்!


அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தைக்காநகர் வட்டாரம் சார்பில் போட்டியிடும் மௌலவி சப்றின் அவர்களை பொதுவேட்பாளராக பொது அமைப்புக்கள் ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கை அரபுக்கல்லுாரியில் சர்கி பட்டத்தை பெற்று மார்க்கத்தை பரப்பிவரும் மௌலவி சப்றின், பொதுப்பணியில் அதிக ஆர்வம் கொண்டவர், தைக்காநகரில் அதிக குடும்ப வாக்குகளை கொண்ட சப்றின் மௌலவிக்கு ரசாக் மௌலவி (தைக்காநகர் ஜூம்ஆ பள்ளிவாசலி்ன் தலைவர்) , கட்சியின் போராளி போஸ்ட் மாஸ்டர் கைறுதீன், சமூக சேவையாளர் நிஹால் அஹமட், ஆகியோர் குடும்ப உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை வாக்குப்பலத்தை தைக்காநரில் கொண்ட மௌலவி சப்றின் எதிர்கால இஸ்லாமிய அரசியலுக்கும் பொருத்தமானவர், கள்ளம் கபடமற்ற இவருக்கு ஆதரவு வழங்க பல முக்கஸ்தர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.