வவுனியா சிங்களப் பிரதேசங்களின் வேட்பாளர் தெரிவில் கடும் போட்டித்தன்மை.






எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில்  போட்டியிடவுள்ள  வவுனியா சிங்களப் பிரதேசங்களின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்று இரட்டைப்பெரியகுளம் றொக்சைட் ஹோட்டலில் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான்  தலைமையில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுனவர்தனவின் முன்னிலையில் இடம்பெற்றது. 

இதன் போது குறித்த தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது பலத்த போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது 

மேலும் இதன் இரண்டாம் கட்டமாக முல்லைத்தீவு வெலிஓயா சேர்க்கட் பங்களாவில் வன்னி மாவட்டத்தின் மூன்று மாவட்டங்களுக்குமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாளர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களின் வேண்டுதலின் பேரில் கெளரவ மஸ்தான் பா.உ தலைமையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.  

இதில் பொதுமக்கள் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு முக்கியத்தஸ்தர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர் 
குறிப்பிடத்தக்கது.

 இமாம் றிஜா