அனுர குமாரவின் செயலாளர் ரணிலின் அலுவலகத்தில்

NEWS


மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய, அனுர விஜேபால என்பவர் தற்போது அலரி மாளிகையில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு குழுவின் அலுவலகத்திற்கான பணிப்பாளராக அவர் கடமையாற்றி வருகிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் நல்லாட்சி அரசாங்கத்தை கட்டுப்படுத்திய அமைச்சரவைக்கும் மேல் இருந்த தேசிய நிறைவேற்று சபையில் உறுப்பினராக இருந்தார்.

இந்த நிலையில், திருடர்களை பிடிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு குழுவின் கீழ் இயங்கும் அவசர தேடுதல் பிரிவின் தலைவராக அனுகுமார திஸாநாயக்க இருந்து வருவதாகவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.
Tags
3/related/default