இரண்டு பக்கத்தில் உள்ள திருடர்களையும் தோற்கடிக்க வேண்டும்!

NEWS


இரண்டு பக்கத்தில் இருக்கும் திருடர்களையும் இம்முறை தேர்தலில் ஒரே தடவையில் தோற்கடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை கூறியுள்ளார்.

இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். அவர்களும் திருடர்கள் இவர்களும் திருடர்கள் என நாங்கள் கூறிய கதை சரியானது.

இதனால், இரண்டு அறிக்கைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற விவாதம் அவசியம். அப்படியான விவாதத்திலேயே இரண்டு அறிக்கைகள் தொடர்பான விடயங்களை முழுமையாக வெளியிட முடியாது.

ஜனாதிபதி வெளியில் செல்லும் கதைகளை ஒரு புறம் ஒதுக்கி விட்டு, வாளை சுழற்றுமாறு நாம் கூறுகிறோம். மைத்திரியும் மகிந்த அணியும் இணைந்தால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகாது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Tags
3/related/default