இரத்தினபுரி மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களும் மகிந்த வசம்

NEWS


நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்ற்ங்களும் பொது ஜன பெரமுனவின் வசமாகியுள்ளது

இவற்றில் ஒன்றையேனும் ஐக்கிய தேசிய கட்சியிலோ அல்லது வேறு கட்சியிலோ வெற்றி பெற முடியவில்ல. இதற்கிணங்க இரத்தினபுரி மாநகர சபை , இரத்தினபுரி பிரதேச சபை , பலாங்கொட நகரசபை , எம்பிலிபிட்டிய நகர சபை , ஆகியவற்றுடன் நிவிதிகல, கஹவத்த இபுல்லே,பெல்மதுல்ல ,கலவான, அயகம, குருவிட்ட, எஹலியகொட, கொலன்ன ஆகிய பிரதேச சபையும் பொதுஜன பெறமுன அமோக வெற்றியீட்டியுள்ளது. இத்தேர்தல் முடிவுகளின் அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சி ,ஐ.ம.சு.மு ஆகிய கட்சிகளின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது தொகுதிகளில் தோல்வியடைந்த்துள்ளமை குறிப்பிடத்தக்க விஷேட நிகழ்வாகும்

இதன் படி நீதியமைச்சர் தலத அதுகோரள , சபரகமுவ அவிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் டபிள்யூ .டி.  ஜே செனவிரத்ன ,  பிரதி மைச்சரான கருணா ரத்ண பரண விதாரண துனேஷ் கங்கன்ந்த ஆகியோரின் அமைப்பாளர் பொறுப்பிலான நிவிதிகல மற்றும் பெல்மதுல்ல பலங்கொட தேர்தல் தொகுதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேஷன் விதானகே மற்றும் ஏ.ஏ விஜயதுங்க ஆகியோரின் பொறுப்பான தேர்தல் தொகுதிகளும் இவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்

அத்துடன் முன்னால் மகாண கல்வி அமைச்சர் சட்டத்தரணை பானு முனப்பிரியவின் பலங்கொட தேர்தல் தொகுதியிலும் பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது

இதே வேலை இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த கூட்டு எதிர்கச்சியின் பிரபலங்களான முன்னால் அமைச்சர்கள் பவித்ரா வன்னியரச்சி , வாசுதேவ நானயக்கார , பிரேமலால் ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உருப்பினர்களான ஜானக வக்கும் புர, ரஞ்சித் சொய்சா ஆகியோரின் தேர்தல் தொகுதிகளில் பொதுஜன பெரமுன வெறரியீட்டியுள்ள்து.
Tags
3/related/default