அரசாங்கத்தின் தோல்விக்குக் காரணம் ஊடகங்களே !

NEWS
0 minute read

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்ததாகும் எனவும்,  கடந்த காலங்களில் அது உரிய முறையில் நிறைவேற்றப்படாமையே தேர்தல் தோல்விக்குக் காரணம் எனவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
சில தரப்பினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை மூடி மறைத்து பொய் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊழலும், இனப்பிரச்சினையும் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான இரண்டு நெருக்கடிகளாகும் என்றும் இந்த நெருக்கடியை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்படுவதன் மூலமே தீர்த்து வைக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும்  தெரிவித்துள்ளார்.
To Top