தான் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்தை அவர் நிரூபிப்பாரானால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தற்பொழுதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெறும் விசேட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
