புதிய அமைச்சரவை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம் ?

NEWS

அமைச்சரவை மாற்றமொன்று நாளை (21) புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்பொழுதுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்த்ததன் பின்னர், புதிய அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றம் வரமாட்டாது எனவும், குறிப்பிட்ட சில அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் மாற்றம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், தேசிய அரசாங்கம் அல்லாவிடின், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 30 பேரும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 45 பேராகவும் இருக்க வேண்டும் என 19 ஆவது திருத்தச் சட்டம் தெரிவிக்கின்றது. 
Tags
3/related/default