தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் தமது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
அதேவேளை புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் திலங்க சுமத்திபால மேலும் தெரிவித்தார்.
