யாருக்கு பெரும்பான்மை பலம் உண்டு என்பது இன்று நாடாளுமன்றில் தெரியும்!

NEWS


யாருக்கு பெரும்பான்மை பலம் உண்டு என்பது இன்று நாடாளுமன்றில் தெரியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தை உருவாக்க முடியும் என கருதும் எவரேனும் அரசாங்கத்தை உருவாக்கிக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். இந்த அரசாங்கத்தின் பிரதமராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார்பிரதமராக பதவி வகிப்பதற்கு எவருக்கேனும் விருப்பம் இருந்தால் அவர்கள் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காண்பிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித உள் முரண்பாடுகளும் கிடையாது, தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்போம் என கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
Tags
3/related/default