27 இலட்சம் ரூபா பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகே இற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்யமாறு கோரப்பட்டிருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கின் சாட்சியாளர் ஒருவர் சாட்சியம் வழங்குவதற்காக வெளிநாட்டிலிலிருந்து வந்திருப்பதாக சாட்சியாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
