மனோ கணேசனை இஸ்லாத்திற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கும் பஹத் ஏ.மஜீத்!
February 15, 2018
அமைச்சர் மனோ கணேசனை புனித இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க வருமாறு பிரபல ஊடகவியலாளர் பஹத் ஏ.மஜீத் அழைப்பு விடுத்துள்ளார்.
சிலோன் முஸ்லிம் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலே இதனை அவர் தெரிவித்தார், மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அமைச்சர் மனோ கணேசன் அரசியல் பிரவேச காலத்திலிருந்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர்,
நேற்று அதிர்வு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் இஸ்லாமியனாக பிறந்திருந்தால் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்திருப்பேன் என்றார்,
இறைவன் அவருக்கு வழங்கிய உள உதிப்பினாலேயே அதனை அவர் பேசினார்.
வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன், அவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, அத்தோடு அவரின் பணிகள் எதிர்காலத்தில் சிறக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் கருத்துரைத்தார்.
Tags
