பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் மக்களுக்கு வாழ்வாதார உதவி!

NEWS




திருகோணமலை மாவட்ட அபிவிருதிக் குழு இணைத்தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் கைத்தொழில்கள் வர்த்தக வாணிப  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் 

குச்சவெளி பிரதேச செயலக பிரிவில்  சுயதொழில், மீன்பிடி , தையல் தொழில் , சிறுகடை போன்ற 243  தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் பல்துறை சார்ந்த  தொழில் முயற்சி கைத்தொழில் உபரணங்கள் நேற்று(26) தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. தனீஸ்வரன் தலைமையில்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள பங்கேற்புடன்    குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில்  உதவி பிரதேச செயலாளர் முபாரக், மீள்குடியேற்ற அமைச்சின் கிழக்கு மாகாண   இணைப்பாளர் டொக்டர். ஹில்மி முகைதீன் பாவா, முன்னால் பிரதேச சபை தலைவர் தௌபீக் , குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்கள்..
Tags
3/related/default