மைத்திரியுடன் மோதல் - வெளியேறிய சந்திரிக்கா!

NEWS
0
Image result for chandrika bandaranaike


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான மோதல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து எழுந்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2020ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் இருப்பதற்கான அவசியம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலருக்கு உள்ள போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குப்பையாக கரைந்து போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு கூறியமையினால் முன்னாள் ஜனாதிபதி அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக இல்லையா என்பது தொடர்பில் தற்போது தேசிய அரசாங்கத்தில் உள்ள 23 அமைச்சர்கள் உடனடியாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இந்த கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கட்சி அரசாங்கத்தில் அதிக காலம் செயற்படுவது அரசியல் ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இலாபமில்லை எனவும், அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து அனைத்து ஒரு தீர்மானத்திற்கு வருவது முக்கியமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மக்களுக்கு இடையில் கொண்டு செல்லும் வகையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பில் கட்சிக்காரர்கள் அதிக அவதானத்துடன் பார்த்து கொண்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default