ஹஸ்பர் ஏ ஹலீம்
சிங்கப்பூர் நாட்டில் கடந்த வியாழக் கிழமை (28) நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டிக்கு கிண்ணியா குழுவினருக்கு மூன்று வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதில் கிண்ணியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மூன்று வெள்ளிப்பதக்கமும், கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு வெண்கல பதக்கமும் கிடைத்துள்ளதாக அங்கிருக்கும் மாணவன் ஒருவரின் பெற்றார் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்டபோது நேற்று(29) தெரிவித்தார்..
