சிங்கப்பூரில் பதக்கங்களை தனதாக்கிக் கொண்ட கிண்ணியா மாணவர்கள் கௌரவிப்பு
personNEWS
August 02, 2018
0
share
ஹஸ்பர் ஏ ஹலீம்
சிங்கப்பூர் நாட்டுக்கு கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு ஐந்து பதக்கங்களை தனதாக்கிக் கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா மகளிர் மகா வித்தியாலய மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (01) கிண்ணியா புஹாரி சந்தியில் பெரும் வரவேற்புடன் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.கௌரவிப்பு நிகழ்வில் மாலை அணிவித்து வீதி ஊர்வலமும் இடம் பெற்றன.மாணவர்கள் குழுவை வழி நடாத்தி சிங்கப்பூர் நாடு வரைக்கும் அழைத்து சென்று வந்த ஆசிரியர் சியாத் நூகு அவர்களும் இத் தருணத்தில் கௌரவிக்கப்பட்டார். பெரும் வரவேற்புடன் வரவழைக்கப்பட்ட மாணவ மாணவிகளை வீதியின் பிரதான இரு மருங்கிலும் வைத்து வரவேற்றார்கள் வாகன பேரணியும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களைக் கொண்டு மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வரவழைத்தார்கள். இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,பிரதேச நகர சபை உள்ளூராட்சி உறுப்பினர்கள்,வலயக் கல்வி அதிகாரிகள்,ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.