வறிய பிரதேச பொதுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க துருக்கி நாட்டின் தூதுவர் இணக்கம்

NEWS
0


அகமட் எஸ். முகைடீன்

துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஒஸ்சுஹதாரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (3) வெள்ளிக்கிழமை குறித்த தூதரகத்தில் சந்தித்து இலங்கைக்கு துருக்கி நாட்டு முதலீட்டாளர்களை அழைத்துவருவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது துருக்கி நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு பிரதி அமைச்சர் ஹரீஸ் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவற்றின் அபிவிருத்திக்கும் மீனவர்கள் மற்றும் விதவைகள் பயன்பெறும் பொதுத்திட்டங்களுக்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default