பரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.
06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் கொடுத்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், நாட்டின் தலை சிறந்த கல்வி மான்களாகத் திகழ்வதற்கும் ஜம்இய்யா பிராத்திக்கின்றது.
நமது மாணவர்கள் பரீட்சை எழுதும் இத்தருணத்தில் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கி 1:00 மணியுடன் முடித்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
குத்பாக்கள் நீண்டு விடுவதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். பரீட்சை எழுதும் நிலையங்களுக்கும் பள்ளிவாயல்களுக்கும் நீண்ட தூரம் உள்ள இடங்களில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்ததாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் வந்தன. எனவே பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி கதீப்மார்கள் தம் குத்பா பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப் படுகின்றீர்கள்.

0 கருத்துகள்