இரத்தினபுரி அல்மக்கியா பாடசாலையின் ஆசிரியர் தின விழா -2018

NEWS
இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இவ்வருட ஆசிரியர் தின விழா  பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் அவர்களின் தலைமையில் இன்று மிகச் சிறப்பாக (09-10-2018) இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக அமானா வங்கியின் சிரேஷ்ட ஆலோசகரும் தேசிய சூறா சபையின் தலைவருமான அல்ஹாஜ்  தாரிக் மஹ்மூத் அவர்களும், கௌரவ அதிதிகளாக அமானா வங்கி இரத்தினபுரி கிளையின் முகாமையாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன்,இவ்வருடம் தரம் ஜந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் மிகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பலரும்  பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

பாடசாலையின் இவ்வருட ஆசிரியர் தின விழாவினை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் (OBA-OGA)பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




3/related/default