யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வரும் முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக விசாலமான பிரத்தியேக இடம் ஒன்றை வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் உறுதியளித்துள்ளார்.
தற்போது அவ்வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொழுகைக்கான இடம் சிறியதாக இருப்பதால் வேறு இடம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதாக பிரதி அமைச்சர் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.
அந்த நடவடிக்கை தாமதமானதால் பிரதி அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கின.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் இன்று காலை வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவினார்.பிரதி அமைச்சர் ஏற்கனவே விடுத்த பணிப்புரைக்கு அமைய தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் விசாலமான தொழுகை அறை ஒன்று வழங்கப்படும் என்றும் பணிப்பாளர் உறுதியளித்தார்.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு ]