அமைச்ரவை நிதி செலவுக்கு எதிரான பிரேரணை இன்று

NEWS
0 minute read
அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. 

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது. 

அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார்.
To Top