நாமல் குமார “மொட்டில்” போட்டி

Ceylon Muslim
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் கீழ் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் செயற்பாட்டு இயக்குனர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வழங்கியதாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
சுற்றாமலை பாதுகாக்கவும் ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கவுமே தான் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில், நாமல் குமாரவே ஊடகங்களுக்கு  வெளிப்படுத்தினார்.
Tags
3/related/default