இந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டில் 220 இலங்கையர்கள் மரணம்!

NEWS


இந்த ஆண்டின் கடந்த காலப் பகுதியில் இலங்கை பணியாளர்கள் 220 பேர் வரையில் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. 

அதில் 52 பெண்கள் உள்ளடங்குவதாக அந்தப் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.  உயிரிழந்தவர்களில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தற்கொலை செய்து கொண்டதில் 06 பெண்கள் மற்றும் 25 ஆண்களும் உயிரிழந்திருப்பதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. 

வீதி விபத்து காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

சவுதி, கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களே அதிகமாக உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக 07 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
Tags
3/related/default