சிங்கப்பூர் மற்றும் இலங்கை வர்த்தக ஒப்பந்தம் அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது!

Ceylon Muslim
சிங்கப்பூர் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பளிக்க கோரி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு மே மாதம 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட எட்டு தரப்பினர் இணைந்து தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று (09) புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் எல்.டி.பீ. தெஹிதெனிய ஆகியோர் உள்ளடங்கிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

குறித்த உடன்படிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக மனுதாரர்கள் சர்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அந்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை சம்பந்தமாக தாம் அவதானித்துக் கொண்டிருப்பதாக கூறிய மனுதாரர்கள் சர்பான சட்டத்தரணிகள், அதன்பின்ன மனு தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன்படி வழக்கை மே மாதம 22ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் மனுவை விசாரிப்பதா என்பது தொடர்பில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.


Tags
3/related/default