படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது

Ceylon Muslim


சட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர். 

திஸ்ஸமகாராம, பன்னகமுவ மற்றும் அளுத்கொட பிரதேசங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் ​தங்கியிருந்த போதே குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர். 

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்த குறித்த குழுவினரை திஸ்ஸமகாராம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். 

நீர்கொழும்பு, சிலாபம் மற்றும் திஸ்ஸமகாராம பிரதேசங்களை சேர்ந்தவர்களெ கைதாகியுள்ளனர். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tags
3/related/default