இலங்கை சுங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

Ceylon Muslim

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான இலங்கை சுங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இடம்பெறுகின்றது. 

இதுதொடர்பில் பிரதமர், நிதியமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை சுங்கப் பணியாளர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை சுங்கப் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
Tags
3/related/default