துபாயில் மதுஷூக்கு ஆயுள் தண்டனை..?

Ceylon Muslim
துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷூக்கு அந்நாட்டின் சட்டத்திற்கு அமைய ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுஷ் போதைப் பொருளை பயன்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் எதிர்வரும் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் துபாய் நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கலாம் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மதுஷூக்கு எதிராக இலங்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து துபாய் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரிடம் தகவல்களை கேட்டறிந்துள்ளனர்.
பிரபல பாடகர்களான அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நந்திமால் பெரேரா ஆகியோர் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளனரா என்பதை அறிய நடந்த பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிரான துபாய் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
Tags
3/related/default