முஸ்லிம் MP களுடன் ACJU அவசர சந்திப்பு...!

NEWS


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இன்று 08.05.2019ம் திகதி புதன் கிழமை இரவு 9.30 முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

சென்ற மாதம் நாட்டில் இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே இவ்வொன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அனைத்து முஸ்லம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இத்தாக்குதல்களை முஸ்லிம் சமூகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதாகவும் இக்கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் தலைமை தாங்கி தேவையான வழிகாட்டல்களை வழங்கிய அதே நேரம் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுருத்தினார். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு சார்பாக 07 பேர் கலந்து கொண்டதுடன் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Tags
3/related/default