மனித உரிமை செயற்பாட்டாளரை கூட்டாக சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்!

NEWS
0 minute read
0
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையிடும் மனித உரிமை செயற்பாட்டாளர் Clément Nyaletsossi Voule தலைமையிலான குழுவினர் நேற்று (24) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலுள்ள மு.கா. கட்சி காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், அலிஸாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், ஏ.எல்.எம். நசீர், அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் 2020 ஜூன் மாதம் மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது அமர்வின்போது தனது இலங்கை வருகை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பார்.
To Top