Headlines
Loading...
10 ஆயிரம் இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அதிரடி..!

10 ஆயிரம் இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அதிரடி..!




10 ஆயிரம் இளைஞர்களுக்கு

ஜப்பானில் தொழில் வாய்ப்பு:
கட்டணம் முற்றிலும் இலவசம் :

சில எம்பிக்களின் இணைப்பாளர்கள் இதற்காக பணம் பெரும் முயற்சியில்:
எனது இணைப்பாளர்கள் கேட்டால் கூட பணம் கொடுக்க வேண்டாம்
--இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அதிரடி -


''NVQ தகுதியுடைய 10 ஆயிரம் இளைஞர்களை முதற்கட்டமாக ஒரே தடவையில் ஜப்பானுக்கு அனுப்பி வேலைவாய்ப்பை  வழங்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.இது முற்றிலும் இலவசம்.ஒரு சதமும் செலுத்தத் தேவையில்லை.

சில எம்பிக்களின் இணைப்பாளர்கள் ஜப்பானுக்கு   அனுப்புவதாகக் கூறி    இப்போதே    பணம்    கேட்டுத்     திரிகிறார்கள்    என்று தகவல் கிடைத்துள்ளது .                 எனக்குப்     பின்னால்                      இருக்கின்ற இணைப்பாளர்களும் பணம் கேட்டு வரலாம்.எவருக்கும் ஒரு சதமும் கொடுக்க வேண்டாம்.''

இவ்வாறு     சுகாதார         இராஜாங்க        அமைச்சர்      பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.  நிந்தவூரில்     நேற்று    இடம்பெற்ற  ஜப்பானுக்குச் செல்வதற்கான         இளைஞர்களுக்கான         செயலமர்வில்   கலந்து கொண்டு  உரையாற்றும் போதே  இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்;

பாடசாலை கல்வி முடிந்த பின்பு தொழிற்பயிற்சி கல்வி என்றொரு கல்வி முறைமை இருப்பதை நாம் அறிவோம்.இதை பாடசாலை மட்டத்திலும் கொண்டுவந்து அனைவருக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசு திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகிறது.


டெங்கு  ஒழிப்பு  தொடர்பான தொழில் வாய்ப்புகள்கூட இனி  இந்தத் தொழில் பயிற்சியை [NVQ] முடித்தவர்களுக்கே வழங்கப்படவுள்ளன. எங்களது சுகாதார  அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்கும்.

கடந்த        அரசில்      10      ஆயிரம்       பேர்     தொழில்    வாய்ப்புக்காக கொரியாவுக்கு   அனுப்பப்பட்டனர்.  பிறகு    பரீட்சைகள்            மூலம் எண்ணிக்கை  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல்     எங்களது    அரசு     எங்களது    இளைஞர்,யுவதிகளுக்கு ஜப்பான்   நாட்டில்   வேலை  வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

NVQ ஐ பூர்த்தி செய்தவர்களுக்கே இது வழங்கப்படவுள்ளது.இதற்குப் பொறுப்பாகவுள்ள      அமைச்சர்     ஹரீன்     பெர்னாண்டோவிடம் 420 இளைஞர்,                              யுவதிகளின்                               சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளேன்.         ஆனால்,        அமைச்சரிடமோ இதுவரை 400 பேர்தான் விண்ணப்பித்துள்ளார்களாம்.

எங்களது அரசு இளைஞர்,யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றது.அதில் ஒன்றுதான் இது.


ஜப்பானுக்குச் சென்றால் நீங்கள் 10 வருடங்கள் தொழில் புரிய முடியும்.முதற்கட்டமாக 10 ஆயிரம் பேரை ஒரே தடவையில் அனுப்பும் திட்டம் அரசிடம் உண்டு.இன்று நிறைய இளைஞர்கள் 15 லட்சம் ரூபா கொடுத்துச் செல்கிறார்கள்.சிலர் திரும்பி வரும் நிலையும் உண்டு.


ஆனால்,  இதற்கு    15    லட்சம்    ரூபா    கொடுக்கத்    தேவையில்லை. முற்றிலும்    இலவசம்  NVQ  தகுதி இருந்தால் போதும். இன்று நாட்டில் உள்ள   ஒரு    வழமைதான்     பணத்தை  வாங்கிக்கொண்டு தொழில் கொடுப்பது.  சுகாதார  அமைச்சிலும் வேலை எடுத்துத் தருகிறோம்.   2 லட்சம் ரூபா தாருங்கள் என்று கேட்கும் நிலையும் உண்டு.இந்தப் பழக்கம் என்னிடம் இல்லை.

இந்தத்                  தொழிலைப்             பெறுவதற்கு      ஜப்பான்      மொழி தேவைப்படுகிறது.    அந்த     மொழிப்  பயிற்சியை வழங்குவதற்காக அமைச்சர்   ஹரீன்  பெர்னாண்டோ  அனுமதி வழங்கியுள்ளார். அந்த மொழியையும்  இலவசமாகப் படிப்பிப்பதற்கே திட்டமிடுகிறோம்.

இதை    உடனடியாக    நடத்துமாறு     அமைச்சர்     வேலை வாய்ப்புப் பணியகத்தின்    தலைவருக்கு  உத்தரவிட்டுள்ளார்.     மிக விரைவில் இதை   ஆரம்பிப்போம்.              இணையத்தளத்திலும்                  நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

NVQ    முடித்தவர்கள்     எத்தனை பேர்     உள்ளார்களா           அத்தனை போரையும்       அனுப்ப      வேண்டும் என்பதே எனது விருப்போம்.NVQ இருந்தால் அது சாத்தியமே.

சில எம்பிக்களின் இணைப்பாளர்கள் ஜப்பான் அனுப்புவதாகக் கூறி இப்போதே                      பணம்   கேட்டுத்     திரிகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.  தயவு செய்து கொடுக்க வேண்டாம்.இது முற்றிலும் இலவசம்.                      தொழிலை               பணத்துக்கு     விற்கும்   நிலை வந்துவிட்டது.பைசல் காசிம் மட்டும் அந்த வேலையை ஒருபோதும் செய்யமாட்டார்.

எனக்குப் பின்னால் இருக்கின்ற இணைப்பாளர்களும் பணம் கேட்டு வருவார்கள்.     ஒருவருக்கும்    ஒரு    சதமும் கொடுக்கக்கூடாது.நான் நல்லவனாக    இருக்க          எனக்குப்               பின்னால்      உள்ளவர்கள் இப்படியான        கீழ்த்தரமான          வேலைகளை        பார்க்கக்கூடும். இல்லையென்று சொல்லமாட்டேன்.-என்றார்.

[ஊடகப் பிரிவு]

0 Comments: