விசாரணை செய்யுங்கள் : நான் தயார் இணங்கினார் ஜனாதிபதி!

NEWS
0 minute read
0
உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆஜராவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி சிறிசேன மீது தெரிவுக்குழு விசாரணை நடத்தவுள்ளது. விசாரணைக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

தெரிவுக்குழு விசாரணைகள் ஜனாதிபதியிடம் நடத்தப்படும் விசாரணையுடன் முடிவுக்கு வருகின்றன.

இந்நிலையில் இம்மாத இறுதியில் அறிக்கை சமர்பித்து விசாரணைகளை முடிவுறுத்துவதற்கும் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
To Top