Headlines
Loading...
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு (விபரம்)

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு (விபரம்)

புகையிரத ஊழியர் சம்பள முரண்பாடுகளும் நீக்கம்

அனைத்து அரச ஊழியர்களின் மாதச் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 3,000 இலிருந்து அதிகபட்சமாக ரூ. 24,000 வரை அதிகரிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 2020 ஜனவரி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சின் ஊடக பணிப்பாளர் எம். அலி ஹஸன் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைக்கமைய, 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆரம்ப சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகபட்சமாக 107% ஆக சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய சம்பள உயர்வு காரணமாக, அரசாங்க துறையின் பல்வேறு துறையில் காணப்பட்ட சம்பள முரண்பாடுகளும் நீங்கும். சம்பள முரண்பாடுகளை அகற்ற தேவையான பரிந்துரைகளை வழங்க, எஸ். ரணுக்கே தலைமையிலான 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பளமும் 2020 ஜனவரியில் இருந்து மேலும் அதிகரிக்கும் என்பதோடு, குறிப்பாக ரயில் மற்றும் தபால் உள்ளிட்ட சேவைகளில் காணப்பட்ட சம்பள முரண்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

புகையிரத சேவை சம்பள முரண்பாடுகளை நீக்க, ரயில்வே தொழில்நுட்ப சேவையின் புகையிரத கட்டுப்பாடு/ கண்காணிப்பு முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கு (Supervisory Management Service) LT எனும் புதிய சம்பளக் குறியீட்டை அறிமுகப்படுத்தி, அதன் ஆரம்ப சம்பளம் ரூ. 36,095 ஆகவும், ரயில்வே என்ஜின் சாரதி உதவியாளரின் (Railway Engine Driver Aide) சம்பளம் ரூ. 34,415 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எனவே, புகையிரத ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி தொழிற்சங்க நடவடிக்கையை தொடர வேண்டிய அவசியமில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2015 இல் ரூ. 11,730 ஆக இருந்த ஆரம்ப நிலை அரச ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 24,250 ஆக ஏற்கனவே அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது, சம்பள முரண்பாடு தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, ரூ. 27,250 ஆக ரூ. 3,000 இனால் மேலும் அதிகரிக்கும்.

குறித்த சம்பள அதிகரிப்புக்கு அமைய, சுமார் 11 இலட்சம் பேரை உள்ளடக்கிய அனைத்து அரச ஊழியர்களுக்கும் மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கும். இப்புதிய அதிகரிப்புகள் யாவும் சம்பளத்துடள் இணைக்கப்படும் என்பதால், சம்பளத்திற்கு சமமான தொகையாக, இடர் கடன்கள் மற்றும் சொத்து கடன்களை பெறுவதில் தற்போது பெறுவதை விட அதிகமான கடன் தொகையை பெறுவதற்கான வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு கிடைக்கும்.

இதன் காரணமாக, அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்ட மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்.

2015 ஆம் ஆண்டில் ரூ. 562 பில்லியனாக காணப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பளத்திற்கான ஒதுக்கீடு, தற்போது ரூ. 750 பில்லியனாக அதிகரித்துள்ளது. ஓய்வூதிய சம்பள செலவாக காணப்பட்ட ரூ. 157 பில்லியன், தற்போது ரூ. 225 பில்லியனாக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட இப்புதிய சம்பளத்தை 2020 ஜனவரி மற்றும் 2021 ஜனவரியில் சம அளவில் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அதற்காக 2020 இல் ரூ. 120 பில்லியன் மற்றும் 2021 இல் மேலும் ரூ. 120 பில்லியன் செலவிடப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் அதிக காலத்தில் அரசாங்க சேவையில் சுமார் 75,000 பேர் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.





அதற்கமைய அரசாங்க சேவையில், தெரிவு செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் பின்வருமாறு அதிகரிக்கும்...
Salary Code
Designation Group
2015 Basic Salary Rs
Basic Salary  by the January 2020
Rs
The Basic salary to be received on the recommendation of the new salary commission
Rs
PL I
Primary Level unskilled
11,730/=
24,250/=
27,250/=
MN II
Management Asst.
13,990/=
28,940/=
33,260/=
MN IV
Associate Officer
15,215/=
31,490/=
36,530/=
SL I (III)
Executive
22,935/=
47,615/=
57,200/=
Ministry Secretary
Ministry Secretary
47,515/=
98,650/=
122,625/=
*TL
Technical (For CGR)
-
-
36,095/=

0 Comments: