Headlines
Loading...
எதிரிகளின் முறைப்பாடே ஹஜ்ஜுல் அக்­பர் கைதின் இரகசியம்!

எதிரிகளின் முறைப்பாடே ஹஜ்ஜுல் அக்­பர் கைதின் இரகசியம்!

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை தொந்­த­ரவு செய்­யு­ம் மு­க­மாக அவ­ருக்கு எதி­ரான நிகழ்ச்சி நிரல்­களைக் கொண்ட தரப்­பினர் சில தவ­றான தக­வல்­களை வழங்­கி­யி­ருப்­ப­தற்கு உறு­தி­யான சாத்­தி­யப்­பா­டுகள் இருக்­கின்­றன என இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­பரின் கைது தொடர்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபே­சி­ரி­வர்­த­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் குடும்­பத்­தினர் சார்­பி­லேயே சட்­டத்­த­ர­ணிகள் இக்­க­டி­தத்தை அனுப்பி வைத்­துள்­ளனர்.

ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்­பி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட குறித்த தந்­தையும் அவ­ரது இரு புதல்­வர்­களும் தமக்கு ஏற்­பட்ட கோபா­வே­சத்தின் கார­ண­மாக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­ப­ரையும் இயக்­கத்­தையும் தொடர்ந்­தேர்ச்­சி­யாக விமர்­சித்து வந்­தி­ருப்­பதை கடந்த 8 மாதங்­க­ளாக நடை­பெற்று வரு­கின்ற புலன் விசா­ர­ணை­க­ளுக்­கூ­டாக அறிய முடி­யு­மாக இருந்­தி­ருக்கக் கூடும் என்றும் இக் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளனர்.

இக்­க­டி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விசா­ர­ணைக்­காக ஆஜா­ரா­கு­மாறு கோரி இருந்தால் அவ­ரா­கவே அங்கு ஆஜ­ராகி இருந்­தி­ருப்பார்.

தனது உடன் பிறந்த சகோ­த­ரனின் இரு மகன்­களும் தீவிரக் கருத்­துக்­களை வெளி­யிட்டு பொருத்­த­மற்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக 2015ஆம் ஆண்டு இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் இணை அமைப்­பான ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்­கத்­தி­லி­ருந்து அவர்கள் விலக்­கப்­ப­டு­வ­தற்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரே ஆலோ­சனை கூறி­யி­ருந்தார். அவ்­வாறே, 2018ஆம் ஆண்டு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் தலை­வ­ராக இருக்­கும்­போதே அவ­ரது குறித்த சகோ­த­ரரும் ஜமா­அத்தே இஸ்­லா­மி­யி­லி­ருந்து, அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து நீக்கம் செய்­யப்­பட்டார்.

26.12.2018 ஆம் திக­தி­யன்று கடு­கண்­ணாவ பகு­தியில் புத்தர் சிலையை சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் சகோ­த­ரரின் இரு மகன்­களும் பின்னர் கைது செய்­யப்­பட்­டனர். புத்தர் சிலைகள் சேதப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தனது உற­வி­னர்­களை அவர்­க­ளது தீவிரக் கருத்­துக்கள் கார­ண­மா­கவும் பொருத்­த­மற்ற நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவும் தமது அமைப்­பி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு கார­ண­மாக அமைந்த, நடு­நி­லை­மிக்க ஒரு­வ­ரான அவரின் திடீர் கைது குறித்து விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஏனைய மதத்­த­வர்­களின் வழி­பாட்டு தெய்­வங்கள் கொச்­சைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை அல்­குர்ஆன் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. புத்தர் சிலைக்கு சேதம் விளை­வித்த நிகழ்வு இஸ்­லா­மியப் போத­னை­க­ளுக்கு முற்­றிலும் மாற்­ற­மான செயல் எனவும் நாக­ரி­க­மிக்க சமூகம் ஒன்றில் வாழ்­கின்ற எந்­த­வொரு மனி­த­ராலும் ஏற்றுக் கொள்ள முடி­யாத விட­ய­மாகும்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இந்­நாட்டு மக்­க­ளுக்கும் சமூ­கத்­துக்கும் தன்­னா­லான சேவையை அய­ராது வழங்­கிய கீர்த்­தி­மிக்க சமூகத் தலைவர் என்­ப­தையும் நாடு முழுவதும் 85 கிளைகளோடு வியாபித்து இயங்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக பலமுறை தெரிவுசெய்யப்பட்டு 1994ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அவ்வியக்கத்தை கடின உழைப்போடும் நேரிய சிந்தனையோடும் வழிநடத்திய, வெகுஜன ஆதரவைப் பெற்ற ஒரு தலைவர் என்பதையும் உங்களுக்கு அறியப்படுத்த விரும்புகின்றோம்.

0 Comments: