Headlines
Loading...
முஸ்லீம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஜனாதிபதி வேற்பாளரே எங்களது தெரிவாக இருக்கும்.

முஸ்லீம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஜனாதிபதி வேற்பாளரே எங்களது தெரிவாக இருக்கும்.







நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலானது தற்கால அரசியல் சூழ்நிலைகளோடும், எதிர்காலத்தில் அதிகாரத்தில் இருக்கக் கூடிய பேரினவாதக் கட்சியின், முஸ்லீம்கள் தொடர்பான ஈடுபாடுகளுக்கும் அமைவாகவே நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுவே முஸ்லீம்களின் உச்சபட்ச  பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்.
நடைபெற இருப்பது ஜனாதிபதித் தேர்தல் என்பதால்  ஜனாதிபதி வேற்பாளர்களில் எவர் எமது சமூகத்தின் பாதுகாப்பினையும், முறையான உரிமையினையும் வழங்க உடன்படுகின்றாரோ அவருக்கு எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையின் "மசூராவுக்கு" அமைவாக எடுக்கப்படுகின்ற தீர்மானமானத்தின் படி ஆதரவினை வழங்குவோம்.
இவ்விடயத்தில் நாம் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. இன்றைய அரசியல் களமானது பல பக்கங்களுக்கும் கயிற்றினை இழுக்கும்   அரசியல் இழுபறி நிலை  கொண்ட  நீயா? நானா? என்ற அரசியல் அதிகாரப் போட்டியில் சிக்குண்டு, ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி குறை கூறிக்  கொண்டு, கடந்த சில காலங்களாக பல அசாதாரண  சூழ்நிலைகளை நாட்டில் ஏற்படுத்தி  "நூலறுந்த பட்டமாக" நிர்வாக கட்டமைப்பின்றி பல அசௌகரியங்களை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலேயே காணப்படுகின்ற "விலாங்கு மீனை ஒத்த" சுயநல தளமாகவே உள்ளது.  அன்றாட  வாழ்க்கை, நிர்வாக செயல்பாட்டுப்   பரம்பல், பொருளாதாரம் தொடக்கம் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மைகள் வரை இதன் தாக்கம் ஆட்கொண்டுள்ளது.     
எமது நாட்டு மக்களுக்கு,  அதிலும்  குறிப்பாக சிறுபான்மையினருக்கு மனஉளைச்சலையுடைய, உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்பினைக் கொண்ட வாழ்க்கையினையே  அது சுட்டிக்காட்டி நிற்கின்றது என்பதால் "சொல்வது எளிது செய்வது கடினம்" என்ற பழமொழியை உயிர்ப்பிப்பதில்  மறு வடிவமாகவே இந்த நல்லாட்சியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் சாட்சியம் கூறுகின்றன.
நல்லாட்சி  கூட்டரசு தேர்தலில் வெற்றிபெற, கிடைத்த வாக்குகளுக்கு பகரமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது,  பங்காளிக் கட்சிகளையும், அவர்களது மக்களின் பிரச்சனை கலந்த தேவைகளையும்   சமப்படுத்தி பிரசவிக்க முடியாமல்   திண்டாடும் ஒரு சிக்கல் நிலை காணப்படுகிறது.  இன்றைய நல்லாட்சியில்   இருக்கின்ற காலங்களைக் கூட மக்கள் மத்தியில் மிதக்கின்ற பிரச்சனைகளுக்கு   தீர்வினைப் பெற்றுக்    கொடுக்க முடியாத இயலாமைக்கு பல காரணங்களைக் கூறும் வரையறைக்குள் வந்துள்ளது எனலாம். இதன்படி கடந்த கால ஒப்பீட்டு ரீதியான அம்சங்களையும்இவ்வரசில்  முஸ்லீம்கள் தொடர்பாக   எடுத்த நடவடிக்கைகளையும், எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளையும் கவனத்தில் கொண்டு நிகழப் பொருத்தமான  முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்
ஆட்சியமைப்பது எவராக இருந்தாலும், இன்றுள்ள அரசினைப் போல் மீண்டும் ஓர் அரசு அமையுமாயின், அதனது தாக்கம் காணப்படும் பிரச்சனைகளையும், விட பன்மடங்கு  அதிகமாக காணப்படும். எனவே அவ்வாறான ஒரு நிலை எமக்கு மீண்டும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டியது எமது கடமையுமாகும். அதற்கேற்ற வகையில் சமூகத்துக்கு பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு எமது கட்சி செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது.

ஐ.எம்.ஹாரிப்
பிரச்சாரச் செயலாளர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு





0 Comments: