முஸ்லீம் வேட்பாளரை மேயராக தெரிவு செய்த இந்து மக்கள்..!

NEWS
0

 - ஏ.எம்.சுல்பிகார் -

இந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க மைசூரு நகரின்
மேயர் பதவிக்கான தேர்தலில் இந்திய பிரதமர் மோடியின் பாஜக வேட்பாளரை வீழ்த்தி மேயர் ஆனார் முஸ்லிம் பெண் வேட்பாளர் தஸ்னீம்!

மைசூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் தஸ்னீமுக்கு கிடைத்துள்ளது. மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தஸ்னீம் போட்டியிட்டார். பாஜக சார்பில் கீதாஸ்ரீ யோகானந்த் போட்டியிட்டார். கீதாவை வீழ்த்தி தஸ்னீம் வெற்றி பெற்றுள்ளார்.

முஸ்லீம் ஒருவரை இந்து மக்கள் தங்கள் நகரின் மேயராக தெரிவு செய்துள்ளமை மோடி அரசுக்கு பலமான எச்சரிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்
மேலும் , 74% சத வீத இந்துக்கள் வாழும் நகர மக்களின் முடிவு இனி இந்தியாவையும் இந்திய மக்களையும் மதத்தின் பெயரால் பிரிக்க முடியாதுஎன்ற உறுதியான செய்தி என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default