வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று ஆரம்பம்

ADMIN
0 minute read
0

கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.


இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.


புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா ,இந்த படகு சேவையில் பயணக்கட்டணமாக நியாயமான கட்டணமே பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும்.
இதன் முழுமையான பலனும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே எமது நோக்கம்
என்றும் கூறினார்.


(அரசாங்க தகவல் திணைக்களம்)
To Top