2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது.
அதன்படி பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.
இதன்போது 7 லட்சத்து 17 ஆயிரத்து எட்டு பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றி இருந்ததாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்