நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் கண்காணிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
இவர்களில் அமெரிக்கா, மடகஸ்கார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய மூவரும் கத்தாரிலிருந்து நாடு திரும்பிய இருவரும் அடங்குகின்றனர்.
