ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் கல்விக்கான தேசிய இணைப்பாளருமான சாபிர் மன்சூர் அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சாபிர் மன்சூர் அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட தலைவரும், வேட்பாளருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களையும் சந்தித்த தனது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
