மேல், வடமேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தில் இன்று மழை பெய்யும் சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்றைய தினம் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
