குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் முதுகலைமாணி நஸீர் அவர்களின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி

ADMIN
0



-ஊடகப்பிரிவு-

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தியாக சிந்தையோடு நமது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் இத்தியாகத் திருநாள் தீர்வாக அமைய இந்த “ஈதுழ் அழ்ஹா” பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போமாக.


குறிப்பாக எமது சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள்
சம்பந்தமாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அந்த வகையிலே எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவிருக்கின்ற தேர்தல் சம்மந்தமாகவும் நாங்கள் ஆலோசித்து எதிர்காலத்திலே சிறந்த முறையிலே நாட்டின் சிறப்பான எதிர்காலத்தைக் கருதி எமது சமூகத்தின் எதிர்காலத்தினையும் கருதி நாங்கள் எல்லோரும் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு உழ்ஹியா என்ற நமது மார்க்க கடமையை நிறைவேற்றுகின்ற அனைவரும் நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கேற்ப உழ்ஹியா கடமையை நிறைவேற்றி சமூகத்தின் நன்பெயருக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அதனை செயற்படுத்த வேண்டுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default