Top News

பாடசாலை மாணவர்களுக்கு, கஞ்சி..?


பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக ஒரு கிளாஸ் பாரம்பரிய அரிசி கஞ்சி வழங்குவதில் விவசாய அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டில் போதுமான அளவு பால் உற்பத்தி இல்லாமை யினாலும் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு தீர்வாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இது தொடர்பாக ஆய்வு செய்யக் குழுவை நியமிக்க அமைச்சர் முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post