அலி சப்ரி Mp யின் செயலாளராக, இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமனம்

ADMIN
0 minute read
0

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான அலிசப்ரி ரஹிமீன் இணைப்பு செயலாளராக புத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இர்ஷாத் றஹ்மத்துல்லா - சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், அறிவிப்பாளராகவும் நீண்டகாலமாக பணியாற்றிவந்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றுள்ள இவர், நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியினை மேற்கொண்டவரும் ஆவார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் சிறந்த தொடர்படல் கொண்டவராகவும் சர்வதேச அரச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுக்கான மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்தும் கொண்டுள்ளார்.
To Top