Headlines
Loading...
 ரிஷாட் பதியுதீனிடம் 7 மணிநேர வாக்குமூலம் நாளையும் அழைப்பு.

ரிஷாட் பதியுதீனிடம் 7 மணிநேர வாக்குமூலம் நாளையும் அழைப்பு.


நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் AHM ஹலீம் ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே அவர்கள் இன்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீீனை சுமார் 7 மணித்தியாளங்கள்  விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்.

மீண்டும் நாளையும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் இன்ஷாப் இப்ராஹிம் பற்றியும் அமைச்சுக்கு கீழ் உள்ள கைத் தொழில் நிறுவனங்கள் அதனுடைய தொழிற்பாடுகள் சம்பந்தமாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம்.

தான் முஸ்லிம் விவகார அமைச்சு பொறுப்பாக இருந்ததனாலேயே அழைக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் தான் ஊடகங்கள் திரிவுபடுத்தி கூடிய பள்ளிகளில் உள்ள கத்திகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்

இதேவேளை, குறித்த இருவரிடமும் இதற்கு முன்னரும் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments: