Headlines
Loading...
வரலாறு கூறும் சேவைகளை செய்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் - ACJU அலி சப்ரியிடம் வேண்டுகோள்.

வரலாறு கூறும் சேவைகளை செய்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் - ACJU அலி சப்ரியிடம் வேண்டுகோள்.


கௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்

புதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் கௌரவ முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும், அமைச்சருக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித்தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதில் பொறுப்புக்கள் இஸ்லாமியப் பார்வையில் அமானிதமானதாகும் என்பதை நினைவுபடுத்தியதுடன், எமது மூதாதயர்களான பதீயுதீன் மஹ்மூத் போன்றவர்களின் சேவைகளை போன்று வரலாறு கூறும் சேவைகளை செய்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறும் வேண்டிக் கொண்டார்.


தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவரின் உரை இடம் பெற்றது. இதன் போது தங்களை போன்ற ஒருவருக்கு இவ்வாறானதொரு அமைச்சு வழங்கப்பட்டதையிட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், தொடர்ந்தும் முன்மாதிரிமிக்க முறையில் முன்னோக்கி செல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

தலைவரின் உரையை தொடர்ந்து கௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் உரையாற்றினார்கள். அதில் தமக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், நாட்டை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்கள் கைகொடுத்து செயற்பட வேண்டும் என்பதாவும் குறிப்பிட்டார்.

இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் பொருளாலர் அஷ்-ஷைக் எ.எல்.எம் கலீல் அவர்கள் பிராத்தனையுடன் நன்றியுரையை நிகழ்த்தி நிகழ்வை நிறைவு செய்தார். இந்நிகழ்வு 05.09.2020 அன்று இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

0 Comments: