Headlines
Loading...
இலங்கையில் மாடுகள் அறுப்பதை நிறுத்தினால்..?

இலங்கையில் மாடுகள் அறுப்பதை நிறுத்தினால்..?


(அய்மன் அம்மார்)

பௌத்த இனவாதிகளின் மற்றுமொரு நவீன கண்டு பிடிப்பும் குற்றச்சாட்டும் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கின்றனர் என்பதாகும்.

உண்மையில் மாட்டிறைச்சியையோ அல்லது ஏதாவது மாமிசங்களையோ உணவாகக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தவில்லை. அதே போன்று, மாட்டிறைச்சியையோ அல்லது வேறு ஏதாவது மாமிச உணவுகளையோ உண்ணத் தவறுபவர்கள் குற்றவாளிகள் என்றும் இஸ்லாம் போதிக்கவில்லை. எனினும் எக்காலத்துக்கும் எச்சூழலுக்கும் பொறுத்தமான போதனைகளையே இஸ்லாம் முன்வைத்துள்ளது.

பாலை வணங்களில் வசிப்போர், காடுகளில் வசிக்கும் வேடர்கள், ஐஸ் மழைகள் கொட்டும் நாடுகளில் வசிப்போர்களைப் பார்த்து, மரக்கறிகளையே உண்ண வேண்டும், மாமிசங்களை உண்ண வேண்டாம் என்று அர்த்தமற்ற, பொறுத்தமற்ற போதனைகளை இஸ்லாம் போதிக்க வில்லை.

அப்படிப் பனித்திருந்தால் இஸ்லாம் எக்காலத்துக்கும் பொறுத்தமானது என்ற வாதமும் பொய்யாகிவிடும்.

இது இவ்வாறிருக்க, புத்த தர்மத்தில் மாடுகள் அல்லது உயிரினங்கள் பலியிடவேண்டாம் என்று எந்தத் தடைகளும் காணப்படவில்லை. புத்த பெருமான் இறுதியாகச் சாப்பிட்ட உணவு பன்றி இறைச்சியாகும். அவர் பல ஆண்டுகள் காட்டில் தவம் இருந்தார். அப்போதெல்லாம் அங்கு மரக்கறி சாப்பிடுவதற்கான எந்த சாத்தியமும் இருக்கவில்லை. அப்படி என்றால் ஏதாவது மாமிசங்களையே அவர் உண்டிருக்க வேண்டும் என்று எம்மால் ஒரு முடிவுக்கு வரமுடிகின்றது.

அப்படியாயின் நவீன கால பௌத்த இனவாதிகள் மாடுகளை அறுப்பதை தடுக்க வேண்டும் என்று தென் மாகாணத்தில் இருந்து கொழும்பு வரை பாத யாத்திரை மேற்கொண்டமை, மாடுகள் ஏற்றும் வாகணம் ஒன்றை தீயிட்டமை, இறைச்சிக் கடைகளைத் தகர்த்தமை போன்ற செயற்பாடுகள் எதனைக் குறிக்கின்றன? இவை உண்மையில் காழ்ப்புணர்சியும், இன வெறியுமேயாகும் என்பதையே குறிக்கின்றன.

இத்தகைய இனவெறியர்களுக்கு நமது உண்மையான நிலைப்பாட்டையும், சகவாழ்வுக்குச் சாத்தியமான வழிகள் என்ன என்பதையும் சிந்தித்து செயலாற்றுவதும் எமது சமூகப் பொறுப்பாகும்

அந்த அடிப்படையில் எனது பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

01- மாடுகள் வளர்ப்பதையும் அவற்றை விற்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த கிராமவாசிகளேயாவர். நாம் மாடறுப்பதை நிறுத்தினால் அவர்களது வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்படும், அப்பொழுது அவர்களே இனவாதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் சந்தர்ப்பம் வெகு கடுதியாக ஏற்படுமல்லவா?

02- மாடுகள் அறுப்பதை நாம் நிறுத்தினால் கட்டாக்காளி மாடுகளின் தொல்லைகள் வீதியில் வந்து நிறையும், அது சூழலை பெரிதும் மாசுபடுத்தும். அப்பொழுது அரசாங்கமே மாடறுப்பை ஊக்குவிக்கும் நிலை ஏற்படாதா?

03- நாட்டின் பல பகுதிகளில் நகர சபைகள், பிரதேச சபைகள் மேற்படி மாட்டிறைச்சிக் கடைகளைத் 'டெண்டர்' மூலம் குத்தகைக்கு விடுவதன் மூலம், கோடிக் கணக்காக ரூபாய்களை ஈட்டிக்கொள்கின்றன. மாடறுப்பதை நாம் நிறுத்தினால், பிரதேச சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் கோடிக்கணக்காக ரூபாய்கள் நஷ்டங்கள் ஏற்படும். அப்பொழுது அச்சபைகளே மாடறுப்பை கண்டிப்பாக ஊக்குவிக்கும் அல்லவா?

04- மிருகக் காட்சிச் சாலைகளில் உள்ள சிங்கம், புலி போன்ற மிருகங்கள் மரக்கறிகள் சாப்பிடுவதில்லை. புலி பசித்தாலும் புல் திண்ணாது என்பார்கள். எனவே, இவற்றுக்காக மாடுகள் அறுக்க வேண்டிய கட்டாயத் தேவையில் அரசு உள்ளதல்லவா

05- இராணுவ வீரர்கள், படைப்பிரிவினருக்கு உணவு வழங்கும் போது, அவர்களுக்கும் மாமிச உணவே கொடுக்க வேண்டிய தேவையில் பாதுகாப்பு அமைச்சு உள்ளதல்லவா? அத்Nதைவையை எப்படி சமாலிக்கும்?

06- மேற் கூறப்பட்ட விடயங்களை சிந்தித்து, சாதித்து பெரும்பான்மை இன வெறியர்களுக்குப் பாடம் புகட்ட, எமது இறைச்சிக் கடை வியாபாரிகள் சற்று விட்டுக் கொடுப்புடன் தற்காலிகமாகவேணும் வேறு ஒரு தொழிலை மேற்கொள்ள முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

07- எல்லாத் பௌத்தத் தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து, பெற்றோலை ஊற்றித் தீக்குளித்தாலும், விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்க வில்லை என்று முன்னாள் ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அதன் தாபகருமான சங்கைக்குரிய மேதானந்தா தேரர் குறிப்பிட்டிருந்தமையும் நினைவு படுத்தப்பட வேண்டிய அருமையான ஒரு கருத்தாகும்.

இவ்விடயங்களை சிந்தித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் திறந்த உளத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வருவோமேயானால், இனவாதிகளின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை குப்பையில் போடலாம். (இன்ஷா அல்லாஹ்). அல்லாஹ்வே போதுமானவன்.


18.07.2013 - மீள் கட்டுரை

0 Comments: