இலங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் J.J பவுண்டேஷன் ஏற்பாட்டில் 'போதை பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்' எனும் தொனியில் போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு சனிக்கிழமை(19) சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இம்மாநாடானது இலங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர் தானிஸ் றஹ்மதுள்ளாஹ் தலைமையில் இடம்பெற்றதுடன் இம்மாநாட்டில் 13 தொடக்கம் 35 வயதுடைய இளைஞர்கள் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது J.J பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் எல்.வை.எம் ஹனீப் பிரதம விருந்தினராகவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா கௌரவ விருந்தினராகவும் பிரதம பேச்சாளராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், அக்கரைப்பற்று மாநகர முன்னாள் பிரதி மேயர் ஏ.ஜி அஸ்மீ தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.எம் ரஸீட் ,சமூதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஏ.எம் நிசார், இலங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் சிரேஸ்ட ஆலோசகரும் ஊடக இணைப்பாளருமான எஸ்.அஸ்ரப்ஹான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- பாறுக் ஷிஹான்
Post a Comment