Headlines
Loading...
தெகிவளை, பள்ளிவாசலுக்கு வருகை தந்த 500 கிறிஸ்தவர்கள்.

தெகிவளை, பள்ளிவாசலுக்கு வருகை தந்த 500 கிறிஸ்தவர்கள்.


(அஷ்ரப் ஏ சமத்)

தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ஆசிரியைகள் மற்றும் கல்லுாாி அதிபா் அருட்சகோதரா் மேரியஸ் பெர்ணான்டோ தலைமையில் தெகிவளை களுபோவிலை உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலை சென்று பாா்வையிட்டாா்கள். அங்கு முஸ்லிம்களது அடக்கஸ்தலம், தொழுகைக்கான மண்டபங்கள், அங்கு வுலுச் செய்யும் முறைகள் குர்ஆன்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மற்றும் அங்கு முஸ்லிம்கள் தொழும் முறைகளை இம் மாணவா்கள் அவதாணித்தாா்கள். 

முதன் முறையாக இன்று தான் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு வருகை தந்தாக மாணவா்கள் அங்கு குறிப்பிட்டாா்கள். மிகவும் அமைதியாகவும் நீத்தமாகவும் மனதுக்கு ரம்மியானமுறையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் அமைந்திருப்பதையிட்டு அதன் பாா்வையிட்டதன் பின்புதான் தெரிந்து கொண்டதாக தெரிவித்தனா். அத்துடன் முஸ்லிம் மையவாடிகளும் மிக பச்சைத் தாவரங்கள் நிறைந்துள்ளது. எனது வகுப்பறையில் சக முஸ்லிம் நண்பா்கள் உள்ளனா். அவா்களுடன் இங்கு வந்து பாா்க்க வசதி கிட்டவில்லை. கல்லுாாி அதிபா் இன நல்லுரவையும் இன ஜக்கியத்தினையும் வழுப்படுத்துவதாகவும் மாணவா்கள் தெரிவித்தாா்கள். மௌலவி அன்வர் அவா்களினால் இஸ்லாமிய வழி முறைகள் பள்ளிவசால் பற்றிய உரையும் துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது. 






0 Comments: