(ஏறாவூர் நிருபர்)மட்டக்களப்பு- மாவடிவேம்பு நீரோடையில் விழுந்த விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் (24.11.2020) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூரைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய கேஎம்.இஸ்மாயில் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வயல் வாடிக்கான மின்விநியோக வயர் அறுந்து நீரோடையில் விழுந்ததையடுத்து அந்த வயர்களை மீட்டு திரும்பும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் சடலத்தைத் தேடியபோதிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் மறுநாள் (24.11.2020) செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கிய சலடத்தை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
திடீர்மரண விசாரணையதிகாரி எம்ஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரணவிசாரணைகளை ஆரம்பித்தார். கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏறாவூர் ஐ.முபாறக்கின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்